2025 மே 19, திங்கட்கிழமை

தனியார் காணிகளில் அமைந்திருக்கும் படை முகாம்களை அகற்ற நடவடிக்கை

Thipaan   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனியார் காணிகளில் அமைந்திருக்கும் படை முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கை  எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி வாக்குறுதியளித்தாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

எம்.எஸ்.தௌபீக் எம்.பிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் நேற்றுத் திங்கட்கிழமை (05) இடம்பெற்றது. இச்சந்திப்பிலேயே, செயலாளர் மேற்கண்டவாறு கூறியதாக தௌபீக் எம்.பி தெரிவித்தார்.

குறிப்பாக, குரங்கு பாஞ்சான் இராணுவ முகாம், சூரங்கல் இராணுவ முகாம், தோப்பூர் 10 வீட்டுத்திட்ட இராணுவ முகாம் மற்றும் மூதூர் தக்வா நகர் கடற்படை முகாம், கெல்கேயார் சென்டர் அமைந்திருக்கும் தனியார் காணியும் சேர்ந்து இருக்கும் கடற்படைமுகாம், புல்மோட்டையில் அமைந்திருக்கும் இராணுவ முகாம் ஆகியவற்றை அகற்றுவதற்கே வாக்குறுதியளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X