2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி கோட்டாவுக்கு ஆதரவு

தீஷான் அஹமட்   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மஹிந்த ராஜபக்ஷவைத் தலைமையாகக் கொண்ட மொட்டு அணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக, இணைந்த வடகிழக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அ.வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.

திருகோணமலையில் கட்சி அலுவலகத்தில், அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், யுத்தம் நிறைவடைந்த பின்னர் வட, கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மஹிந்த அணியினரால் முன்னெடுக்கப்பட்டன எனவும் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதோடு, வடக்கு நோக்கி ரயில்களும் விடப்பட்டன எனவும் தெரிவித்தார்.

எனினும், இந்த நல்லாட்சி அரசாங்கம் 05 வருடங்களாக பெரிதான ஒரு அபிவிருத்தியையும் செய்யவில்லையெனவும் கம்பெரலிய திட்டத்தில்கூட நூறு, இருநூறு மீற்றர் வீதிகளையும், விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களுமே கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, அரசியல் தீர்வு கிடைக்குமென்று கூறப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .