2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தம்பலகாம பிரிவில் விவசாய செய்கை ஆரம்பம்

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வயல் நிலப் பகுதிகளில் தற்போது நெற் செய்கைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அசாதாரண சூழ் நிலையாயினும் ஊரடங்கு சட்ட காலத்திலும் கூட அரசாங்கத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, விவசாய நிலங்களில் நெற் செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. தம்பலகாமம் பகுதியில் உள்ள 4ஆம் வாய்க்கால் பகுதியில் தற்போது நெல் விவசாய நிலங்கள் விதைக்கப்பட்டு வருகின்றன.

நெற் செய்கையை நம்பி வாழும் விவசாயிகள், விவசாய சங்கங்கள் ஊடாக இதற்கான பொலிஸ் அனுமதி பெற்று, தங்களது வயல் நிலங்களுக்கு செல்வதற்கான அனுமதி பாஸ் நடைமுறைகளை முன்னெடுத்துள்ளனர்.

சட்டத்தை மதித்து நடக்கும் விவசாயிகள் தங்களுக்கான இலகுவான முறை ஊடாக நாளாந்தம் பயனடையக் கூடிய வகையில் தங்களுக்கும் ஏனைய சலுகைகளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .