2025 மே 19, திங்கட்கிழமை

தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்ந்தது

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம், அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் முயற்ச்சியால் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலையாக தரமுயர்த்தலுக்கான உத்தியோகபூர்வ கடிதத்தை கல்வி அமைச்சின் செயலாளர் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடம் கடந்த 26ஆம் திகதி கையளித்தார்.

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,

'நீண்டகால வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலையின் தரமுயர்த்தலானது மிகவும் அத்தியாவசியமானது. இவ்விடயம் தொடர்பில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பட்ட தரப்பினரும் தரமுயர்த்த முயற்சியினை மேற்கொண்ட போதிலும் அது பயனளிக்காமல் போனது.

அத்தோடு கடந்த கால அரசாங்கத்தினாலும் இப்பாடசாலையின் தரமுயர்த்தலானது,  திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கியமை மகிழ்ச்சி அளிக்கின்றது' என்று அவர் தெரிவித்தார்.

இப்பாடசாலை தரமுயர்த்த உறுதுணையாக செயற்பட்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதகிருஸ்னன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதுடன் கடந்த காலத்தில் பாடசாலையை தரமுயர்த்த முயற்சிகளை மேற்கொண்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தரமுயர்த்துவதற்கு தேவையான பௌதீகவள அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டினையும் அரசு மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலையாக தரமுயர்த்தலுக்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை நாடாளுமன்ற உறுப்பினரால் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு கடந்த (31)  பாடசாலையில் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X