Suganthini Ratnam / 2016 மார்ச் 03 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளை படையினரும் பெரும்பான்மையின மக்களும் கையகப்படுத்தியிருக்கும்வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் மேம்பாடும் தன்னிறைவும் காணமுடியாதென எழுத்தாளரும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நலன்புரி அமைப்பின் தலைவருமான கனகசபை தேவகடாட்சம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் புதன்கிழமை (02) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், 'வடக்கு மாகாணத்தில் படையினர் கையகப்படுத்தியுள்ள விவசாய நிலங்களால் இந்த நிலங்களுக்குச் சொந்தமான விவசாயிகள் கையேந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுபோல கங்குவேலி, ஒட்டு, படுகாடு போன்ற கிராமங்களில் தமிழர் நிலங்களை பெரும்பான்மையினத்தவர் கையகப்படுத்தியிருப்பதால், இங்குமொரு கையேந்தும் சமூகம் உருவாகிவிட்டது' என்றார்.
'மேலும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் தாக்கம், சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையம் உள்ளிட்ட காரணிகளினால் விவசாய நிலம் உட்பட சூழல் மாசடைவதுடன், மழை வீழ்ச்சி இல்லாமல் வெப்பம் அதிகரித்தல் போன்ற அழிவுகளை நாம் எதிர்நோக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
தற்போது எந்தவொரு அதிகாரமும் தமிழ் மக்களின் கைகளில்; இல்லை. இதனால் ஊழல், பாலியல் துஷ்பிரயோகம், அனுமதியற்ற மணல் அகழ்வு போன்ற சட்டவிரோதச் செயற்பாடுகள் கட்டுப்பாடுகளின்றி இடம்பெறுகின்றன. இவை திட்டமிட்டு தமிழ் மக்களை அழிக்கும் செயலாகவே காணமுடியும். இவற்றை புரிந்துகொண்டு தமிழ் மக்களாகிய நாம்;, எம்மை நாமே எவ்வாறு வளப்படுத்த முடியுமென்று அறிவு சார்ந்து சிந்திக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026