2025 ஜூலை 28, திங்கட்கிழமை

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

தற்கொலைகளைத் தடுக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் 01.00 மணியளவில் வந்தடைந்தது.

இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் ச. சிவசங்கர் மற்றும் அங்கத்தவர்களால் வரவேற்கப்பட்டார்கள்.

தைரியம், இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, இலங்கையில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் nஐத்தா தேவபுர என்பரைத் தலைவராக கொண்ட தன்னார்வ தொண்டர் நிறுவனம், ரோட்டரிக்கழக அனுசரணையுடன்  இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் நாளொன்றுக்கு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 11பேர் ஆக உள்ளது. தற்கொலை முயற்சிகளை தடுப்பதுடன், மக்களின் உளவள நலனை மேம்படுத்தவும் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்படுபவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி, அதிலிருந்து விடுவிப்பதற்கான வழி வகையினை ஏற்படுத்துவதற்குமாகவே இவ் விழிப்புணர்வூட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிசிசி 1333 எனும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை நோக்காக கொண்டு, இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக, தொடர் சைக்கிளோட்ட நிகழ்வை நடாத்தி வருகின்றது.

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இவ்விசேட செயற்றிட்டத்தின் விசேட தூதுவராக செயற்படுவதுடன், இந்த செயற்றிட்டம் தொடர்பான தமது கருத்துக்களையும் தொடர்பூடகங்கள் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .