Princiya Dixci / 2021 மே 10 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில கிராம சேவகர் பிரிவுகள், இன்று (10) விடுவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்தார்.
இதன்படி, அன்புவழிபுரம், காந்தி நகர், உவர்மலை, மட்கோ, லிங்கநகர், காவட்டிகுடா- சமன்புர, மற்றும் தானயகம ஆகிய கிராம பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, திருகோணமலையில் பாலையூற்று பகுதி தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025