Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 01 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக், பொன் ஆனந்தம், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்; அஹமட்டுக்கும் இடையிலான சந்திப்பு, திருகோணமலையிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அதிகாரப்பகிர்வு உடனடியாக மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், திவிநெகும போன்ற திட்டங்களால் பறித்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீண்டும் கையளிக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் முதலமைச்சர் எடுத்துக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 2018ஆம், 2019ஆம் ஆண்டுகளுக்கான திட்டங்களில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், கிழக்கு மாகாணத்தில் ஆற்றல் மேம்பாட்டு மையங்களை நிறுவி அவற்றின் ஊடாக வினைத்திறன் மிக்க அரச சேவையை முன்னெடுப்பது தொடர்பான யோசனையை கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி முன்வைத்தார்.
விவசாயம், மீன்பிடி, கால்நடை, கைத்தொழில் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் வழங்க வேண்டும் எனக் மாகாண முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாதச் செயற்பாடுகள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் மாகாண முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
தற்போது நாட்டில் கட்டியெழுப்பப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு இனவாதச் செயற்பாடுகள் அச்சுறுத்தலாக திகழ்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
47 minute ago