2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

திருகோணமலையில் கைதிக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை சிறைச்சாலையில் கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையிலிருந்து 09 கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்காக இன்று (24) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விடயத்துக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளான கைது, ஹோமாகம சிறைச்சாலையில் இருந்து திருகோணமலை சிறைச்சாலைக்கு கடந்த 12ஆம் திகதி கொண்டு வரப்பட்டதாகவும் அவர், மூதூர் நீதிமன்றம், திருகோணமலை மேல் நீதிமன்றம் போன்ற நீதிமன்றங்களுக்கு வழக்குத் தவணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சில சிறைக்கைதிகள் முகங்களை அணியாமல் இருப்பதாகவும் இது தொடர்பில் கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தொடர்ச்சியாக பொதுமக்கள் முகக்கவசங்கள் அணியுமாறு, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X