Princiya Dixci / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன், எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.
திருகோணமலை, லவ்லேன் பகுதியில் 5 பேரும், ஜமாலியா பகுதியில் 5 பேரும் ஸ்ரீமாபுர பகுதியில் 7 பேரும், கிண்ணியா பிரதேசத்தில் ஒருவருமாக 18 பேருக்கு, நேற்று (03) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்தப் பகுதிகளில் வீதித் தடைகள் இடப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் இரவு - பகலாக காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 148 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
26 minute ago