2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திருகோணமலையில் மான்கள் உணவின்றித் தவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம் 

திருகோணமலை கோட்டை பகுதியில் இருந்த மான்கள் அனைத்தும், உணவின்றித் தவித்து வருவதாகவும் உணவுக்காக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு பிரிந்து செல்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் சிறப்பு வாய்ந்த இடமான திருகோணமலை பகுதியில், கூட்டம் கூட்டமாக நின்ற மான்கள், உணவின்றி திசை மாறி மக்களைத் தேடி செல்வாதகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து மரக்கறி கடைகளும் ஹோட்டல்களும் மூடப்பட்டிருக்கின்றமையால் மான்கள் உண்பதற்கு உணவின்றி வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் கோட்டை பகுதிக்கு வருமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை நகரை அழகுபடுத்தும் மான்களை பாதுகாப்பது அனைவருடைய கடமையாகும். எனவே மான்களுக்கு உண்பதற்கு உணவுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .