Janu / 2025 ஜூன் 05 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதியை மறித்து திருக்கடலூர் பிரதேச மீனவர்கள், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை வியாழக்கிழமை (05) அன்று முன்னெடுத்தனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் தங்களது படகை சேதத்துக்கு உள்ளாக்கி மீனவர்களை தாக்கியவர்களை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் போது பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் ஒரு சில மணி நேரம் அப்பகுதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
பல நூற்றுக் கணக்கான மீனவக் குடும்பங்கள் கலந்து கொண்டு இந்த வீதி மறியல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்
ஏ. எச். ஹஸ்பர்


7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026