Editorial / 2019 ஜூலை 13 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை, மன்னார் மாவட்ட செயலகத்தில், அமைச்சர் மனோ கணேசனின் பணிப்புரையின் பேரில், இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு, இரண்டு மதத் தலைவர்கள், ஆலய நிர்வாகம், குறித்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும், மன்னார் ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ, வெளிநாட்டுக்குச் சென்றுள்ளமையால், இந்தக் கலந்துரையாடலை, பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அமைச்சர் மனோ கணேசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்தே, இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
51 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
4 hours ago