2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

திருடிய நகைகளை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில், ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பெறுமதியான திருடிய தங்க நகைகளை வைத்திருந்த 53 வயதுடைய நபரொருவரை, ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, நேற்று (22) உத்தரவிட்டார்.

வேறு ஒரு நபர் திருடிய தங்க நகைகளை, குறித்த சந்தேகநபர் வைத்திருந்த நிலையிலே, உப்புவெளி குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் கைதுசெய்யப்பட்டார்.

தங்க நகைகளைத் திருடிய பிரதான சந்தேகநபர் தலைமரைவாகி இருப்பதுடன், அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .