அப்துல்சலாம் யாசீம் / 2019 ஜனவரி 27 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, 5ஆம் கட்டைப் பகுதியில், கடையொன்றை உடைத்து, அங்கிருந்த பணம், பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில், 14, 16 வயதுச் சிறுவர்கள் இருவர், இன்று (27) கைதுசெய்துள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடை உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டுக்கமையக் கைதுசெய்யப்பட்ட இச்சிறார்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடி மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சைக்கிள்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வழிபாட்டுத் தலமொன்றில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்துப் பணம் திருடியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .