Editorial / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், அ. அச்சுதன்
கொரோனா வைரஸ் தொற்று, ஊரடங்குச்சட்டம் காரணமாக பொதுமக்கள், வங்கிச்சேவைகளை பெறுவதில் அசளகரியங்களை எதிர்நோக்குவதைக் கருத்திற்கொண்டு, நடமாடும் வங்கிச்சேவையை, மக்கள் வங்கி முன்னெடுக்கவுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன, நேற்று(3) தெரிவித்தார்.
தமது வேண்டுகோளுக்கு இணங்க, இந்தச் சேவை திருகோணமலை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைவாக, நாளை (5) திருகோணமலை நகர், மொரவெவ, மகாதிவுள்வெவ, கோமரங்கடவெல, திரியாய், குச்சவெளியிலிலும் 06ஆம் திகதி தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை, கந்தளாய், பேராறு, அக்போபுர, வான்எல, ஆயிலடி, கிண்ணியாவிலும், 8ஆம் திகதி சேருநுவர, தெஹிவத்த, வெருகல், இலங்கை முகத்துவாரத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
9 ஆம் திகதி, மூதூர், கட்டைபரிச்சான், மல்லிகைத்தீவு, சம்பூர், பெரியவெளி ஆகிய பிரதேசங்களிலும் குறித்த நடமாடும் வங்கிச்சேவை இடம்பெறவுள்ளது.
மக்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் மீளப்பெறல், சீட்டை பயன்படுத்தி பணம் மீளப்பெறல், மக்கள் வங்கி மற்றும் ஏனைய வங்கி தன்னியக்க இயந்திர அட்டைகளைப் பயன்படுத்தி பணம் மீளப்பெறல் உட்பட பல சேவைகளை, மக்கள் இதன்மூலம் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .