2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

திருமலை ஒருங்கிணைப்புக் குழு நாளை கூடும்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஒலுமுதீன்  கியாஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஏற்கெனவே திட்டமிட்டதன்படி, மாவட்டச் செயலகத்தில் நாளை (04) காலை 10 மணிக்கு நடைபெறுமென மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோரின் இணைத் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் சுபீட்சத்தின் நோக்கு - அபிவிருத்தித் திட்டம் உட்பட பல விடயங்கள் ஆராயப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X