Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 நவம்பர் 29 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை நகர சபைக்குட்பட்ட துளசி புரம் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் மழைநீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இவ்வீதியை புனரமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வீதியின் ஊடாகவே அபயபுரம் கனிஷ்ட வித்தியாலயம், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் களஞ்சியசாலை அமைந்திருப்பதுடன், ஜமாலியா செல்லும் பிரதான வீதியாகவும் காணப்படுவதாக பிரதேசவாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை இவ்வீதியை புனரமைத்துத் தருமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடமும், உள்ளுராட்சி திணைக்களத்திடமும் பல கடிதங்களை கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாகவும் பொதுமக்களின் கையெழுத்துடன் அனுப்பி வைத்தும் இதுவரைக் காலமும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அப்பகுதி பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, அபயபுர ஊடாக ஜமாலியா செல்லும் துளசிபுரம் வீதியை உடனடியாக புனரமைப்பதற்குறிய நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago