எப். முபாரக் / 2017 நவம்பர் 11 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பதினான்கு தேக்கு மரக் குற்றிகளை ஏற்றிச்சென்ற இரண்டு சந்தேக நபர்களை, இன்று (11) அதிகாலை கைதுசெய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த 27, 34 வயதுடைய இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், மரக்குற்றிகள் ஏற்றிச் செல்வதாகக் கிடைத்த தகவலுகமைய அவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
12 minute ago
20 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
48 minute ago