Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், அப்துல் சலாம் யாசீம்
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவாட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில், வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களின் நலன் கருதிய நடமாடும் சேவை, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், இன்று (12) நடைபெற்றது.
வெருகல் பிரதேச செயலாளர் குணநாதன் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திருமலை மாவட்ட மேலதிக முகாமையாளர் டப்ளியூ. ஜீ.எச்.சுமணசூரிய, முகாமையாளர் திருமதி எஸ்.சிவானந்தகுமார், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
வீட்டுத் தேவையுள்ள, வீடு தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கும் சுமார் 700 வரை இந்நடமாடும் சேவையில் பங்கேற்றனர்.
வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரைக்கமைவாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள வீட்டுத் தேவையுள்ள, இருப்பிடம் சார் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களுக்காக இந்த நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருமலை மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் இந்நடமாடும் சேவைகள் நடத்தப்படுகின்றன.
இதுவரை திருமலை மாவட்டத்தின் மூதூர், தம்பலகாமம், சேருவில, பட்டினமும் சூழலும், கோமரங்கடவல, பதவிசிறிபுர, குச்சவெளி உள்ளிட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago