Niroshini / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிமன்ற நீதிவான் ஞாயிற்றுக்கிழமை(27) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது படுகாயங்களுக்குள்ளான குறித்த நபர், சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைது செய்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாகவே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago