Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 12 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எஸ்.சசிக்குமார்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், இன்று (12) காலை 9.00மணி முதல் 12.30 மணிவரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
வைத்தியரொருவர், தாதிய உத்தியோகத்தரொருவரை நோயாளர்களுக்கு முன்னிலையில் திட்டியமையால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தாதியர் சங்கம், அரசாங்க தாதியர் சங்கம் ஆகிய இரு சங்கங்களைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்களே பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
திருகோணமலை, பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு, இரத்தம் பரிசோதனை செய்வதற்காக, வைத்தியர் வழங்கியதாக ஏதும் எழுதப்படாத பற்றுச்சீட்டொன்றை நோயாளரொருவர் கொண்டு வந்துள்ளார்.
இதன்போது, ஊசி போடும் அறையிலிருந்த தாதிய உத்தியோகத்தர், இந்த பற்றுச்சீட்டை கொடுத்து, பற்றுச்சீட்டு வழங்கிய வைத்தியரிடம் சென்று விவரத்தினை எழுதிவிட்டு வருமாறு தெரிவித்ததையடுத்தே, வெளிநோயாளர் பிரிவின் வைத்திய பொறுப்பதிகாரி தாதியரை பேசியதாகவும் தெரியவருகிறது.
இவ்விடயம் தொடர்பாக இரு சங்கங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், பணிப்பாளரை சந்திக்க சென்ற போது தன்னைத் தாதியர்கள் சந்திக்க தேவையில்லையென மறுத்துள்ளார். இதனை கண்டித்தே தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, நோயாளர்கள் காலை முதல் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கொழும்பு சங்கங்களின் ஆலோசனையின் பேரில் திருகோணமலை சங்க உறுப்பினர்கள், பணிப்பாளர் மற்றும் ஏசிய வைத்தியர் மற்றும் வைத்திய நிபுணர்கள் அனைவரும் இனைந்து கலந்துரையாடியதையடுத்து, பணிப் பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்ததாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago