Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.சசிக்குமார்
கிழக்கு மாகாணத்திலுள்ள 15 பிரதேச, ஆதார, மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்காக 40 புதிய தாதி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று திங்கட்கிழமை மாலை திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரினால் வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் 17 பேரும் மட்டக்களப்பில் 14 பேரும் அம்பாறையில் 09 பேருமாக மொத்தம் தாதி உத்தியோகஸ்தர்கள்; நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் வைத்தியசாலை 6, கிண்ணியா வைத்தியசாலை 6, புல்மோட்டை வைத்தியசாலை 1, தோப்பூர் வைத்தியசாலை 1, ஈச்சிலம்பற்று வைத்தியசாலை 1, தம்பலகாமம் வைத்தியசாலை 1,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை வைத்தியசாலை 6, ஏறாவூர் வைத்தியசாலை 3, கழுவாஞ்சிக்குடி வைத்தியசாலை 3, காத்தான்குடி வைத்தியசாலை 2 அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் வைத்தியசாலை 4, பொத்துவில் வைத்தியசாலை 2, அட்டாளைச்சேனை வைத்தியசாலை 2, சம்மாந்துறை வைத்தியசாலை 1 என்ற அடிப்படையில் தாதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago