Kogilavani / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
'கிழக்கு மாகாணத்தில் தற்போது 96 தாதிய உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 40 பேருக்கான நியமனங்களே வழங்கப்படுகின்றன. அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.
அதிகளவில் ஆளணி பற்றாக்குறை நிலவும் வைத்தியசாலைகளுக்கே இந்நியமனங்களை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தில் 40 தாதியர் உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'கிழக்கு மாகாணத்தில் தற்போது 96 தாதிய உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 40 பேருக்கான நியமனங்களே வழங்கப்படுகின்றன.
அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் நியமனம் பெரும் அனைவரும் மனக் கசப்புகளின்றி, வழங்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு சென்று சிறந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் மார்ச் மதம் புதிய தாதியர்களுக்கான நியமனம் வழங்கும்போது, தற்போது நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு தாம் விரும்பும் இடங்களுக்கு செல்ல உதவிகளையும் இடமாற்றங்களையும் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago