Princiya Dixci / 2016 மார்ச் 01 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப். முபாரக்
திருகோணமலையில் 42,000 ரூபாய் தாபரிப்பு தொகை செலுத்தாத நபரை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி. சரவணராசா, நேற்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.
திருகோணமலை, அன்புவழிபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், திருமணம் முடித்து தனது குழந்தைக்கு மாதாந்தம் 6,000 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் கடந்த ஏழு மாதங்களாக தாபரிப்பு பணமான 42,000 ரூபாயைச் செலுத்தாது முல்லைத்தீவுப் பகுதியில் நண்பரொருவரின் வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரைப் பொலிஸார் கைதுசெய்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருகோணமலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026