Thipaan / 2016 ஜூன் 05 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் பதினைந்தாயிரம் ரூபாய் தாபரிப்புப் பணத்தினை செலுத்தாத நபர் ஒருவரை, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், சனிக்கிழமை (04) உத்தரவிட்டார்.
மூதூர், மேன்கமம் பகுதியைச் சேர்ந்த 25வயதுடைய குறித்தநபர், தமது பிள்ளைக்கு மாதாந்தம் ஐந்தாயிரம் ரூபாய் தாபரிப்புப் பணம் செலுத்தி வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்கள் தாபரிப்புப் பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில், அவரின் முன்னாள் மனைவி, மூதூர் பொலிஸ் நிலையில் செய்த முறைப்பாட்டையடுத்து, வெள்ளிக்கிழமை (03) மாலை குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார், மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (04)ஆஜர்படுத்தினர். இதன்போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago