Princiya Dixci / 2016 பெப்ரவரி 16 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை, தோப்பூர், நீணாக்கேணி பிரதேசத்திலுள்ள 39 குடும்பங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் காணி உறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்படுமென திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பின் அழைப்பை ஏற்று நீணாக்கேணி கிராமத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) விஜயம் செய்து குறித்த காணியைப் பார்வையிட்ட பின்னர் பொதுமக்களிடம் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தோப்பூர் -நீணாக்கேணி கிராமத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணி, கடந்த 2014ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமானதென வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இக்காணியில் தாம் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்ததாகவும் காணியைத் தங்களுக்குப் பெற்றுத்தருமாறும் இக்கிராமத்திலுள்ள காணி உரிமையாளர்கள், கடந்த வருடம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
10 minute ago
18 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
37 minute ago