Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2017 ஜனவரி 15 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொது வைத்தியசாலை, மூதூர் தள வைத்திசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை ஆகிய மூன்று வைத்தியசாலைகளிலும் 122 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலைகளின் உயரதிகாரிகள், இன்று (15) தெரிவித்தனர்.
மூதூர் தள வைத்தியசாலையில் 62 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு பற்றிய விழிப்புணர்வுகளை நடாத்தி வருவதுடன் சோதனைகளை முன்னெடுத்து வருவதாகவும் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
கிண்ணியா தள வைத்தியசாலையில் 47 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் பெரியாற்றுமுனை, அண்ணல் நகர், மஹ்ரூப் நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியதிகாரி ஏ.எச்.சமீன் தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் 13 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 04 சிறுவர்கள் அடங்குவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் பீ.கயல்வெளி தெரிவித்தார். அத்துடன் எச்.டி.ஓ என்றழைக்கப்படும் டெங்கு அதிகூடிய கவனிப்பு பிரிவொன்றினையும் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் டெங்குகள் பரவாமல் இருப்பதற்கு பொதுமக்களை தெளிவூட்டுவதற்கும் சுற்றி வளைப்புக்களை முன்னெடுப்பதற்கும் பிரதேச ரீதியாக விஷேட குழுவொன்றினை நியமித்துள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago