2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருகோணமலையில் 3,438 டெங்கு நோயாளர்கள்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 3,438 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,  டெங்குக் காய்ச்சல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் பீ.கயல்விழி தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (10) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இம்;மாவட்டத்தில் 12 சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகப் பிரிவுகள் காணப்படுகின்றன. இருப்பினும்,  5 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுகளிலேயே டெங்கு அபாயம் காணப்படுகின்றன. அதில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இங்கு டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,344 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9  உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.  

திருகோணமலை நகர், மூதூர், குச்சவெளி ஆகியவற்றில் தலா  ஒரு உயிரிழப்புச் சம்பவமும் குறிஞ்சாங்கேணியில் 3 உயிரிழப்புச் சம்பவங்களும் டெங்குக் காய்ச்சல் காரணமாக இடம்பெற்றுள்ளன எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .