2025 மே 22, வியாழக்கிழமை

திருகோணமலையில் மீன்களின் விலை அதிகரிப்பு

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை மீன் சந்தையில் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் விசனம் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் மீன்களின் விலைகள் குறைவாக காணப்பட்டிருந்த போதிலும் மீனவர்கள், மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லாமையினாலும் கடலில் நீரோட்டம் அதிகமாக காணப்படுவதினாலேயுமே மீன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட கீரிமீன், தற்போது 350 ரூபாவுக்கும் 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பூச்சக்கண்ணி தற்போது 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், பாரமீன் 450 ரூபாவுக்கும் சின்ன அருக்கலா 950 ரூபாவுக்கும், பெரிய அருக்கலா 1,100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக மீன் வியாபார முதலாளிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .