Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 29 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, முதலிக்குளம் முதலாம்; கண்டத்தில் வீடு ஒன்றை உடைத்து இலத்திரனியல் பொருட்களைத் திருடி விற்பனை செய்த ஒருவரிடமிருந்து அப்பொருட்களை கொள்வனவு செய்து வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய பெண் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
முதலிக்குளம் முதலாம் கண்டத்திலுள்ள மேற்படி வீட்டு உரிமையாளர், மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்குச் சென்றுள்ளார். இவரை அனுப்புவதற்காக அவரது மனைவி கடந்த வியாழக்கிழமை கொழும்புக்குச் சென்றுவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (27) வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அவர் வீட்டுக் கதவைத்; திறப்பதற்கு முற்பட்டபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டிலிருந்த மூன்று இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களும் திருட்டுப் போயிருந்தன.
இது தொடர்பில் பொலிஸில் அவர் முறைப்பாடு செய்த நிலையில் விசாரணை செய்துவந்த பொலிஸாருக்கு, நொச்சிக்குளம் பிரதேசத்தில் இலத்திரனியல் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு சென்று அப்பொருட்களை கொள்வனவு செய்த பெண்ணை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து இலத்திரனியல் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மேற்படி வீட்டை உடைத்த சந்தேக நபரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .