Princiya Dixci / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, கிண்ணியா ஆயிலியடிப் பகுதியில் சமுர்த்தி திட்டத்தின் திரிய பியச திட்டத்தின் மூலம் கட்டப்படும் வீடமைப்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பயனாளிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
குடிசையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்காக ஒரு வீட்டுக்கு 75 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறப்பட்டிருந்த போதிலும் சில வீடமைப்பு பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
அப்பொருட்களின் பெறுமதி 54 ஆயிரம் ரூபாயாக உள்ளதாகவும் இது குறித்து சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் கேட்ட போது அவ்வளவு தான் என்று கூறியதாகவும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
சமுர்த்தி உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை வைத்து வியாபாரம் செய்து கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
வீட்டுத்திட்டத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பயனாளிகள் தெரிவிப்பது குறித்து கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் அவரிடம் கேட்டபோது, கடந்த வருடம் இறுதியில் சமுர்த்தி திணைக்களத்தில் மிகுதி பணம் இருப்பதாக டிசெம்பர் 20ஆம் திகதி தெரியவந்ததையடுத்து அப்பணத்தை கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு வழங்கியதாகவும் அதில் வழங்கப்பட்ட பணத்தை ஓலைக் குடிசையில் வாழும் மக்களுக்கு ஓர் அறையில் வீட்டைக் கட்ட வேண்டும் எனும் நோக்கில் பயனாளிகளைத் தெரிவு செய்து அவ்வீடுகளை கட்டியதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சிலருக்கு வழங்கத் தகுதி இருக்காத படியால் அப்பணத்தை வழங்கவில்லையெனவும் அவர்களே மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் தெரிவித்து வருவதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
7 minute ago
21 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
29 minute ago
48 minute ago