2025 மே 21, புதன்கிழமை

தொலைக்காட்சித் திருடனுக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஜூன் 01 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, மொறவௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான தொலைக்காட்சிப் பெட்டியொன்றைத் திருடி தம்வசம் வைத்திருந்த நபரை, இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா, இன்று புதன்கிழமை (01) உத்தரவிட்டார்.

தம்பலகாமம், சிராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடை நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தம்பலகாமம் பகுதியிலிருந்து, மொறவெவ பகுதிக்குக் கூலி வேலைகள் செய்வதற்குச் சென்ற குறித்தநபர், அப்பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியினைத் திருடி வைத்திருந்த நிலையில், மொறவௌ பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (31) மாலை கைது செய்யப்பட்டார்.

அவர், திருகோணமலை நீதிமன்றில், மொறவெவ பொலிஸாரினால் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X