Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூலை 23 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா, எம்.முபாரக், தீசான் அஹமட், பைஷல் இஸ்மாயில்
ஏறாவூரில் பிரதேசத்தில், சுமார் 100 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் பொருட்டு, 'சகோதரிகளுக்கு உதவுவோம்' எனும் தலைப்பில் தொழிற்பயிற்சி மையம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த தொழிற் பயிற்சி நிலையத்தின் திறப்பு விழாவில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இயங்கும் பிரபல சமூக சேவை அமைப்பான முஸ்லிம் கொடை நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஹாறூன் ரசீட் மற்றும் இணைப்பாளர் மிஸ்தார் அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிழக்கில் இருந்து எந்தவொரு பெண்;களும் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லக்கூடாது. அதற்கான மாற்று நடவடிக்கைகளாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுகைத்தொழில் மற்றும் இதர நடவடிக்கைகளை மேறகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கையின் நான்காவது கட்டமாகவே இந்தப் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்திருக்கும் யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago