2025 மே 16, வெள்ளிக்கிழமை

நபர் மீது தாக்குதல்: ஒருவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கி காயமேற்படுத்திய நபரை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு,  மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான்  ஐ.என்.றிஸ்வான் இன்று (10)  உத்தரவிட்டார்.                                  

 சேருநுவர, நீலாப்பொல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                      

குறித்த நபர், பழைய குரோதத்தை மனதில் வைத்து தாக்கியதாக பாதிக்கப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸில், நேற்று முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின்

விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், குறித்த நபரை நேற்றுக் கைதுசெய்ததுடன், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .