Princiya Dixci / 2016 ஏப்ரல் 17 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் நபரொருவரை வெட்டிக் காயப்படுத்திய சந்தேகநபரை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் செனவிரட்ன, இன்று ஞாயிற்றுக்கிழமை (17) உத்தரவிட்டார்.
வான்எலப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (16) இரவு மது அருந்தி விட்டு குறித்த சந்தேகநபர், நபரொருவரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாகக் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருவருக்கிடையிலான காதல் பிரச்சினையே வெட்டுச் சம்பவத்துக்குச் காரணம் எனவும் பொலிஸால் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபரை, நேற்று சனிக்கிழமை (16) இரவு கைதுசெய்து கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026