Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 19 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் சித்த மருத்துவ பிரிவு ஏற்பாடு செய்த நீரிழிவு நோய் தொடர்பான கண்காட்சி, விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் நீரிழிவு தொடர்பிலான பரிசோதனை என்பன, கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வீ.கனகசிங்கம் தலைமையில், கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இன்று (19) நடைபெற்றது.
இதில், பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக முன்னால் உபவேந்தர் அருட்தந்தை கலாநிதி ஜீ.எப்.ராஜேந்திரம் கலந்துகொண்டார்.
அத்ததுடன், சித்த மருத்துவ பீடத்தின் பகுதித் தலைவர் திருமதி பகிரதன் விஜிதா, நீரிழிவு தொடர்பிலான விளக்கவுரைகளை வழங்கி வைத்தார்.
மேலும், யோகாசன பயிற்சிகள், நீரிழிவுக் கட்டுப்பாடு தொடர்பிலான உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பிலான முறைகளையும் விளக்கவுரையூடாக பாடசாலை மாணவர்களுக்கு இங்கு தெளிவூட்டப்பட்டன.
பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர் என்பதுடன், விசேடமாக இலவச நீரிழிவு பரிசோதனைகளையும் பலர் செய்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
44 minute ago
59 minute ago