Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 நவம்பர் 12 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை மாவட்டத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய திணைக்களங்கள் இலக்குகளை நிர்ணயித்து, விவசாயிகளை அறிவுறுத்தி செயற்படுத்த வேண்டுமென, மாவட்ட அரசாங்க அதிபர் சமன தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக தாம் கடமையேற்ற பின்னர் நடத்தப்படும் முதல் கூட்டமாக இக்கூட்டம் அமைந்தது.
இதன்போது அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில், “திருகோணமலை மாவட்டத்தில் நெல் உற்பத்தி பிரதானமானதாக காணப்படுகின்றது. இருப்பினும், ஏனைய மாவட்டங்களின் நெல் உற்பத்தி உட்பட உணவுற்பத்தி மட்டங்களோடு எமது மாவட்ட உற்பத்தியை நோக்குமிடத்து திருப்திகரமான நிலையில் இல்லை.
“தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு, எமது உணவு உற்பத்தியை நாம் கட்டாயம் அதிகரிக்க வேண்டும். மாவட்ட நுகர்வுக்கு மேலதிகமான உணவு உட்பத்திகளை பிற மாவட்டங்களுக்கு சந்தைப்படுத்தப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வாரி செளபாக்யா திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்திலுள்ள 22 கமநலஅபிவிருத்தி நிலையத்திலும் ஒரு நிலையத்துக்கு 05 குளம்/ அணைக்கட்டு என்றடிப்படையில் வேலைத்திட்டங்கள தெரிவுசெய்யப்பட்டு, அடுத்தவருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதன்போது விவசாய உற்பத்தியோடு தொடர்புபட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்ற மீளாய்வுகள் உற்பத்தியை அதிகரிக்க நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
13 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
6 hours ago
7 hours ago