Niroshini / 2016 ஜனவரி 13 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை மூதூர் நீதிமன்றத்தில் பொலிஸாரைத் தூற்றியதுடன் நீதிமன்றினுள் சத்தமிட்ட நபருக்கு ஒன்றரை வருட சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான், செவ்வாய்க்;கிழமை(12) தீர்ப்பளித்தார்.
கிண்ணியா, பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஆர்.அப்துல் முனீஸ் (வயது 33)என்பவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், திருகோணமலை, கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தார்
இந்நிலையில், அவரை மூதூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கொன்றுக்கு அழைத்துச் சென்ற போதே, இவ்வாறு நீதிமன்றில் பொலிஸாரை அவதூராக பேசியதோடு நீதிமன்றில் சத்தமிட்ட குற்றச்சாட்டுக்காக குறித்த நபருக்கு இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
4 minute ago
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
38 minute ago
43 minute ago