Niroshini / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புகாரி
2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மூதூர் தபாலக சந்தியிலிருந்து பெரியபாலம் வரையிலான 2 கிலோ மீற்றர் வீதியின் புனர்நிர்மாண பணிகள் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூதூர் பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
மூதூர் நீர்தர்கிக்கு அருகாமையில் கூடாரம் ஒன்றை அமைத்து அமைதியான முறையில் சுலோக்களை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
நாளை புதன்கிழமை இவ் வீதியின் புனரமைப்பு விடயம் குறித்து அதிகாரிகளால் சரியான முடிவு வழங்கப்படாவிட்டால்,திருகோணமலை-மட்டக்களப்பு வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago