Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 10 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச செலகப் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராம சேவகர் பிரிவிலுள்ள சுடலைப்பிட்டி, காரவெட்டுவான் மற்றும் மாயிலடப்பன் சேனை ஆகிய கிராம மக்களின் போக்குவரத்துக்காக, உப்பாறு கிராம அபிவிருத்திச் சங்கத்தால், படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் அடை மழை காரணமாக இந்த கிராமங்களின் தரைவழிப்பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக, சுடலைப்பிட்டி கிராமத்தில் 30 குடும்பங்களும் மயிலடப்பன் சேனையில் 35 குடும்பங்களும் காரவெட்டுவான் கிராமத்தில் 8 குடும்பங்களும் நாளாந்த போக்குவரத்துப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன.
உப்பாறு பிரதேசத்தில் இருந்து சுடலப்பிட்டி கிராமத்துக்கு ஒரு தோணியும் மயிலடப்பன் சேனை மற்றும் காரவெட்டுவான் ஆகிய கிராமங்களுக்கு ஒரு தோணியும் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, அடை மழை காரணமாக 15 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிடிருப்பதாக, கிண்ணியா பிதேச செயலாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருதுத் தெரிவிக்கையில்,
இந்த பிரதேசங்களில் இருந்து மக்களை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பதற்காக, நேரடியாக களத்துக்குச் நிலவரங்களை அவதானித்து வருவகின்றோம்.
அனர்த்த முமைத்துவ மத்திய நிலையம் மற்றும் உள்ளூராட்சிமன்றங்களின் உதவியுடன் வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக வடிகான்கள் வெட்டப்படுகின்றன.
பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்காக தற்காலிக கூரைகளை வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago