Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம் எஸ் அப்துல் ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், தீசான் அஹமட், எப்.முபாரக்,
கிழக்கு மாகாண சபையால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமன வயதெல்லையை அதிகரிக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கைக் கடிதமொன்றை, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டியன் பெர்ணன்டோவிடம் அவர் கையளித்துள்ளார். அக்கோரிக்கைக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“கிழக்கு மாகாண சபையால், பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதன் மூலம், பட்டதாரிகள் தொழில்பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன். அதற்காக தங்களுக்கும் கிழக்கு மாகாண சபையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர். இவர்களுள் சிலர், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில் வயதெல்லை 35ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களால் இந்த நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.
வேறு சில மாகாணங்களில் பட்டதாரி நியமனங்களுக்கான வயதெல்லை 35ஐ விட அதிகமாக இருப்பதால், அது போன்ற ஒரு வாய்ப்பு கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும். இதனால், அவர்களது வாழ்வாதாரம் அதிகரிக்கும் என்று நான் கருதுகின்றேன்.
எனவே, இந்த விடயங்களைக் கவனத்திற்கொண்டு, கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வயதெல்லையை 35ஐ விட அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago