2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பட்டம் ஏற்றல் போட்டி

Thipaan   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

 

திருகோணமலை மக்கள் வங்கி பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வு, திருகோணமலை கடற்கரையில், நேற்றுச் சனிக்கிழமை (08) கொண்டாடப்பட்டது.

சிறுவர் கணக்கில் 2,500 ரூபாயை நிலுவையாக கொண்டுள்ளவர்கள், பட்டம் ஏற்றல் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமான சிறுவர்கள், தமது தயாரிப்புகளான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.

இவர்களில் முதல் 3 சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

முதல் பரிசாக சைக்கிள் வழங்கப்பட்டது.  இவர்களுடன், 5 சிறுவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது. போட்டியில் பங்கு கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் விசேட பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X