Janu / 2026 பெப்ரவரி 02 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பெளத்த சமயத்தை அவமரியாதைக்கு உற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று கூறி திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக மூன்று பேர் வீதியில் அமர்ந்து திங்கட்கிழமை(2) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுஜன அரகலய குடிமக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் சானக்க பண்டார மற்றும் சிங்கள பெளத்த ஐக்கியம் அமைப்பின் செயலாளர் லங்கா தரங்க ஆகியோரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றில்,திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானத்தை அமைத்து, அதில் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பான வழக்கு நடைபெற்ற சந்தர்ப்பத்திலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எஸ்.கீதபொன்கலன்

5 minute ago
14 minute ago
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
26 minute ago
44 minute ago