Janu / 2025 ஜூன் 18 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாகவும் அதிகளவான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்ற பகுதியாகவும் காணப்படுகின்ற குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட நிலாவெளி கடற்கரை பிரதேசத்தை வசதிகளுடன் கூடிய கடற்கரைப் பகுதியாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கள ஆய்வு செவ்வாய்க்கிழமை (17) மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கள ஆய்வில் குச்சவெளி பிரதேச செயலாளர், குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இக் கடற்கரை பல வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு எதிர்காலத்தில் குச்சவெளி பிரதேச சபையின் கீழ் பராமரிப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அ . அச்சுதன்

14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026