2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் பகிஷ்கரிப்பு

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

நிறைவு கான் மருத்துவவியல் தொழில் வல்லுனர்கள் ஒன்றியத்தின் கீழ் இயங்கி வருகின்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் சேவையாற்றும் மருத்துவ ஆய்வு கூட தொழினுட்பவியலாளர்கள், இயன் மருத்துவர்கள், கதிர் வீச்சு பிரிவினர் மற்றும் மருந்தாளர்கள் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்குரிய பதவி உயர்வுகள் வழங்காமை, பதில் கடமைக்கு கொடுப்பனவு வழங்காமை, மேலதிக நேரக் கொடுப்பனவு வரையறைக்குட்படுத்தியமை மற்றும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை அனுமதி பெற்றுக்கொள்ளுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பல தடவைகள் பேச்சுவார்தைகளை நடத்தியும் சிறந்த தீர்வு கிடைக்கவில்லையென பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .