2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பஸ் விபத்தில் 11 பேர் காயம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, சுப்பிரமணியம் பாஸ்கரன்

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணிகளை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்து பஸ், இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பஸ் நிலையத்தில் அதிகாலை 4.30க்குப் புறப்பட்ட குறித்த பஸ், கன்னியா சோதனைச்சாவடிக்கு அருகில் வளைவொன்றில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பாக உப்புவெளிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X