2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைக் காணியில் கனிய மணல் அகழ்வு; மக்கள் சந்தேகம்

Editorial   / 2020 நவம்பர் 18 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட்

புடைவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணியை, கனிய மணல் அகழ்வுக்காக புல்மோட்டை மணல் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கியமை தொடர்பில் பொதுமக்களுக்கு உள்ள சந்தேகம் நிவர்த்திக்கப்பட வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேட்டுள்ளார்.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.

புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணியை, கனிய மணல் அகழ்வுக்காக 3 மாதங்களுக்கு புல்மோட்டை இல்மனைக் கூட்டுத்தாபனத்துக்கு, கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

3 மாதங்களுக்குப் பின் மணல் அகழ்வுக்காக அகற்றப்படும் கட்டடம் மீளமைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விளையாட்டு மைதானமாக காணி செப்பனிடப்பட்டு, பாடசாலைக்கு மீள ஒப்படைக்க வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இக்காணி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், மேற்படி இல்மனைக் கூட்டுத்தாபனம் இந்த நிபந்தனைப்படி செயற்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு உள்ளதெனவும்  ஏனெனில், கடந்த காலங்களில் புல்மோட்டையில் இல்மனைக் கூட்டுத்தாபனத்தால் புடைவைக்கட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர் என, கடிதத்தில் இம்ரான் எம்.பி குறிப்பிட்டுள்ளார். 

“இது போன்று  இந்த விடயத்திலும் ஏமாற்றப்பட்டு விடுவோமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.  எனவே, தங்களால் வங்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வில்லையாயின் அதனை நிறைவேற்றச் செய்வதற்கு தாங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பது குறித்து பொதுமக்கள் அறிய ஆவலாக உள்ளனர். எனவே, இது குறித்து தங்களது தீர்மானத்தை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X