Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
திருகோணமலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
இந்த பாடசாலை மாணவர்கள் 6 பேரிலும் திருகோணமலை ஜமாலியாவில் 04 பேரும், கிண்ணியாவில் 02 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில், இன்று (21) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்த அவர், திருகோணமலை மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தின் கொரோனா நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார்.
இதன்போது அவர் தகவல் உரைக்கையில், “திருகோணமலை ஜமாலியா இறைச்சிக் கடையில் பணிபுரிபவரின் உறவினர்கள் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கிழக்கில் இதுவரை 778 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
“திருகோணமலையில் 40 பேரும், மட்டக்களப்பில் 102 பேரும், அம்பாறையில் 23 பேரும், கல்முனையில் 613 பேருக்கும் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago