Editorial / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்டத்தில், பொலிஸ் ஊரடங்குச் சட்டம், இன்று(1) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், கிண்ணியா பிரதேச மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர்கள், கொரோனா தொற்று பரவாமிலிருப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பொருட்கொள்வனவில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கிண்ணியா பிரதேசத்தில் சனநெரிசல் குறைவாகவே காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
வங்கிகளில் தன்னியக்க இயந்திரத்தில், பணத்தை மீளப்பெறல் உள்ளிட்ட சேவைகளைப் பெறுவதற்காக, மக்கள், சமூக இடை வெளியை வரிசைக் கிரமமாக நின்று பேணி வந்ததாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள், கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்களாக இன்றைய தினமும் பொதுஇடங்கள்,வங்கிகள், மக்கள் கூடும் பகுதிகளில் கடமைக்காக அமர்த்தப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .